சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?
பூசணிக்காய் வளர்ப்பு !
Pumpkin Cultivation!
சுய தொழில்கள்,
பூசணிக்காய் வளர்ப்பு !
பூசணிக்காயை மாடித்தோட்ட முறையில் பயிரிட முதலில் பந்தல் அமைக்க வேண்டும். மாடியின் நான்கு மூலைகளிலும் 4 சிமெண்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை அல்லது ஓரளவு திடமான குச்சிகளை எடுத்து ஆழமாக நட்டு வைக்க வேண்டும்.
👉 அந்த நான்கு குச்சிகளையும் இணைக்குமாறு நான்கு புறங்களிலும் கயிறு கம்பிகளை கட்டி விட வேண்டும். அதன் பின் குறுக்கு நெடுக்காக இரண்டு பக்கங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி பந்தல் அமைக்கலாம். அதன்பிறகு தொட்டிகளில் பூசணிக்காய் விதையை விதைத்து அவை வளர்ந்ததும் பந்தலில் படர விடலாம்.
அறுவடை :
👉 பூசணிக்காயை நடவு செய்த 90-ஆம் நாளிலிருந்து அறுவடை செய்ய துவங்கலாம். அறுவடை செய்யும் காயின் முற்றிய நிலை என்பது அவற்றின் மேல் பரப்பில் உருவாகும் சாம்பல் போன்ற பொருள் உதிர்வதிலிருந்து கண்டறியலாம். சாதாரண வெப்ப நிலையில் காய்களை நல்ல காற்றோட்டமான அறைகளில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டு சேமிப்பதன் மூலம் 4 முதல் 5 மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.