காகித அட்டை தயாரிப்பு !
விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டை, காகிதப் பெட்டி போன்ற பொருட்களுக்கு மக்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் காகித அட்டையின் தேவையும் அதிகமாக உள்ளது. எனவே, சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கான சிறந்த தொழிலாக காகித அட்டை தயாரிப்பு உள்ளது. இந்த தொழிலை செய்வதன் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும்.
தேவையான பொருட்கள்:
1. பழைய வெள்ளைத்தாள்கள்
2. நோட்டு புத்தகங்கள்
3. சிறு துண்டுகளான பஞ்சு துணிகள்
4. திரவக்கூழ் தயாரிக்கும் இயந்திரம்
5. சிலிண்டர் மோல்டு வெட் இண்ட் பேப்பர் மெஷின்
6. பேப்பர் கட்டிங் இயந்திரம்
தயாரிக்கும் முறை :
⭐ பழைய வெள்ளைத்தாள்கள், நோட்டுப் புத்தகங்கள், பயன்படுத்த முடியாத சிறு துண்டுகளான பஞ்சு துணி வகைகள் இவை தான் அட்டை செய்ய தேவையான மூலப்பொருட்கள்.
⭐ இவற்றை திரவக்கூழ் இயந்திரத்தில் போட்டு அதில் நீர் சேர்த்து கூழாக மாற்ற வேண்டும்.
⭐ பின்பு, கூழாக்கியதை சுத்தம் செய்து அதை சிலிண்டர் மோல்டு இயந்திரத்தில் போட்டு பரப்பி விட வேண்டும்.
⭐ பிறகு, காகித அட்டை தயாராகி கன்வேயர் மூலம் வெளிவரும். தயாரான அட்டையை நன்கு காய வைக்க வேண்டும்.
⭐ காய வைத்த அட்டைகளை தேவையான வடிவங்களில் இயந்திரத்தின் மூலம் கட் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
⭐ நமக்கு தேவையான நிறம் மற்றும் அடர்த்தியிலும் காகித அட்டையை தயார் செய்து கொள்ளலாம்.
விற்பனை முறைகள்:
உற்பத்தி செய்யப்பட்ட காகித அட்டைகளை கொண்டு பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம். மேலும் கடைகளுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்து கூடுதல் இலாபம் பெறலாம்.
http://bit.ly/2J3ZCgA