வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ் தயாரிப்பு !

 


வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ் தயாரிப்பு !

 இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும், பேச்சிலர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள் தான். அந்தவகையில் வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். தொழிலும் லாபகரமாக இருக்கும்.


வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ் தேவையான பொருட்கள்: 


1. மல்லித்தூள்


2. மிளகு


3. சுக்கு


4. பூண்டு


5. கிராம்பு


6. ஏலக்காய்


7. லவங்கப்பட்டை


8. புதினா


9. வெஜிடபிள் ஆயில்


10. சீரக சம்பா அரிசி


செய்முறை விளக்கம்:


👉 மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை தரமானதாக தேர்ந்தெடுத்து அதனை சுத்தப்படுத்தி, அவற்றில் சிலவற்றை குறிப்பாக மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி தனியாக வைத்துக்கொண்டு அரைத்த பொடியை வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்போது வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ் விற்பனைக்குத் தயார்.


மூலப்பொருட்கள் மலிவாக கிடைக்கும் இடங்கள்:


👉 சீரக சம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் பலசரக்கு பொருள்கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும்.


விற்பனை முறைகள்: 


👉 அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளுக்கு கொடுத்து அதிகப்படியான லாபம் பார்க்கலாம்.





Post a Comment

Previous Post Next Post