சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?
சுண்டைக்காய் வத்தல் தயாரிப்பு !
சுய தொழில்கள்,
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் விதவிதமாக சமைக்க நேரமில்லாத காரணங்களால் வீட்டு உணவில் வத்தல், வடகம் போன்றவை அதிகம் இடம்பிடிக்கிறது. பல வகையான சுவைகளில் வத்தல் வகைகள் உள்ளன. இதனை பாரம்பரிய முறையில் வத்தல் வகைகளை தயாரித்தால் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வத்தலுக்கு தேவையான பொருட்கள்:
🌼 பச்சை சுண்டைக்காய் - அரை கிலோ
🌼 மோர் - ஒரு லிட்டர்
🌼 காய்ந்த மிளகாய் - 3
🌼 உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை சுண்டைக்காயை அலசி கத்தியால் லேசாக கீறிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு வைத்து, 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டவும், பிறகு மோரில் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, சுண்டைக்காயை போட்டு ஊறவிடவும். ஒரு நாள் முழுவதும் ஊற வேண்டும். அடுத்த நாள் சுண்டக்காயை கைபடாமல் கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காயவிடவும். மோரை கீழே ஊற்றி விடக்கூடாது. தனியே எடுத்து வைக்கவும். மாலையில் திரும்பவும் காயை மோருக்கு போட்டு கலக்கி மூடிவைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே மாதிரி 3 நாட்கள் செய்ய வேண்டும். மோர் வற்றி நன்றாக சுண்டக்காய் காய்ந்ததும் எடுத்து விற்பனைக்கு தயார் படுத்தலாம்.
விற்பனை முறைகள்:
பதப்படுத்தப்பட்ட சுண்டக்காயை தேவையான அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து அண்டை வீடுகள் மற்றும் சிறிய, பெரிய கடைகளுக்கு விற்பதன் மூலம் நல்ல இலாபம் பார்க்கலாம்.