செல்லோ டேப் தயாரிப்பு !

சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?

செல்லோ டேப் தயாரிப்பு ! 

சுய தொழில்கள்,

செல்லோ டேப் தயாரிப்பு ! 

செல்லோ டேப் தேவை என்ன என்பதை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வீடுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இதன் தேவை இன்றும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தயார் செய்து விற்பதன் மூலம் அதிகப்படியான இலாபம் அடையலாம்.


தேவையான பொருட்கள் :

1. ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம் 


2. அடிசிவ் பசை


3. கோட்டிங் இயந்திரம்


4. ஸ்லைட்டிங் இயந்திரம்


6. கலர் பிரிண்டிங் இயந்திரம்


தயாரிக்கும் முறைகள் :

⭐ முதலில் அடிசிவ் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும்.


⭐ பிறகு அடிசிவ் பசை ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் சூடுபடுத்தினால் செல்லோ டேப்பாக வெளியில் வரும்.


⭐ செல்லோ டேப் வந்தவுடன் இதை ஸ்லைட்டிங் இயந்திரத்தில் வைத்து நமக்கு தேவையான அளவில் 5, 12, 15 மில்லி மீட்டர் அளவுகளில் கட் செய்து கொள்ளலாம்.


⭐ செல்லோ டேப்பில் ஏதாவது எழுத்துக்களை பிரிண்ட் செய்துக் கொள்ள கலர் பிரிண்டிங் மெஷினைப் பயன்படுத்தி கொள்ளலாம். சாதாரண செல்லோ டேப்பை விட கலர் செய்த செல்லோ டேப் தான் அனைவரையும் அதிகம் ஈர்க்கிறது.


⭐ உற்பத்தி செய்யப்பட்ட செல்லோ டேப்பை சரியான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.


விற்பனை முறைகள் : 

தயார் செய்த செல்லோ டேப்பை நாம் அருகில் உள்ள கடைகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும், மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யலாம்.





Post a Comment

Previous Post Next Post