ஜாதிக்காய் சாகுபடி முறைகள் !

 ஜாதிக்காய் சாகுபடி..!

சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?

சுய தொழில்கள்,

சாகுபடி தொழில்கள்,


ஜாதிக்காய் சாகுபடி முறைகள் !

விவசாயத்தில் புதிய ரகங்கள் மற்றும் பயிர் சாகுபடி குறித்த செய்திகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது மாறி வரும் விவசாயத்திற்கு ஏற்ப மாற்றுப் பயிரை சாகுபடி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.


👉 அந்த வகையில் ஜாதிக்காய் ஒரு பணப்பயிராகும். இந்த பயிரை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம். இப்போது ஜாதிக்காய் சாகுபடி முறைகள் பற்றி காண்போம்.


எந்த மண்ணில் வளரும் :


👉 ஜாதிக்காய் மரமானது நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா வகை மண் நிலங்களிலும் வளரும் தன்மைக்கொண்டது. ஜாதிக்காயில் ஆண் மரம், பெண் மரம் என இரண்டு வகை உண்டு. ஈரக்காற்று அதிகம் வீசும் இடங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. 


👉 ஜாதிக்காய், நிழல் உள்ள இடங்களில் செழிப்பாக வளரும். மேலும் இம்மரத்தை தென்னை, பாக்கு, ரப்பர் போன்ற தோப்புகளில் ஊடு பயிராக சாகுபடி செய்யலாம்.


👉 இம்மரமானது அதிக பனி பொழியும் இடங்களில் வளராது மற்றும் உப்பு தண்ணீரில் வளர்ச்சி குறைவாக காணப்படும். இம்மரம் சுமார் இருபது அடி உயரம் வரை வளரக் கூடியதாகும்.


ஜாதிக்காய் நடவு செய்யும் முறை :


👉 ஜாதிக்காய் விதை முளைக்க 6 வாரம் ஆகும். முளைத்த பிறகு, ஆறு மாதம் வரை நன்கு பராமரிக்க வேண்டும். பின்பு ஆறு மாத கன்றுகளை தொட்டிகளில் மாற்றி வைக்க வேண்டும். ஒரு வருடம் முடித்தவுடன் நடவுக்கு பயன்படுத்தலாம்.


👉 ஜாதிக்காய் கன்றை நடவு செய்வதற்கு முன்பாக ஒன்றரை அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழிகள் தோண்ட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு குழிகளுக்கும் 2 கிலோ சாணம் மற்றும் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். கன்றுகள் நட்டவுடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.


பராமரிக்கும் முறை :


👉 ஜாதிக்காய் நடவு செய்த பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள செடிகளுக்கு தினமும் பத்து லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். 


👉 ஒவ்வொரு ஆண்டும் மரத்திற்கு கொடுக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். ஜாதிக்காய் வளர்ப்புக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்ததாகும். 


👉 அதே போல் மாதம் ஒரு முறை செடிகளுக்கு நடுவில் வளர்ந்துள்ள களைகளை எடுக்க வேண்டும். இம்மரம் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதால், நோய் தாக்குதல் இருக்காது.


👉 ஜாதிக்காய் மரத்திற்கு ஆண்டுக்கு இரண்டு முறை அடியுரமாக 30 கிலோ வரை தொழுவுரம் கொடுக்க வேண்டும். ஜாதிக்காய் மரமானது ஒன்றரை வருடத்தில் நான்கு அடி வரை வளரும். 


அறுவடை முறைகள் :


👉 ஜாதிக்காய் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காய்களில் இருந்து ஜாதிப்பத்திரியையும் காயையும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.


👉 மேலும் ஏழு ஆண்டுகளில் ஜாதிக்காய் மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக பத்து கிலோ ஜாதிக்காய் மற்றும் இரண்டு கிலோ பத்ரியும் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் ஜாதிப்பத்திரி மற்றும் காய்களை நிழலில் காய வைத்து தேவைக்கு ஏற்ப விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.







Post a Comment

Previous Post Next Post