மூலிகை சீயக்காய் தூள் தயாரிக்கும் முறைகள் !
சுய தொழில்கள்,
தயாரிப்பு தொழில்கள்,
மூலிகை சீயக்காய் தூள் தயாரிக்கும் முறைகள் !
நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த கூடிய ஷாம்பூ போன்ற பொருட்கள் கூந்தலின் வளர்ச்சிக்கு பயன்படாமல், அதிகபடியான முடி உதிர்வை மட்டுமே தருகின்றன. இவ்வாறாக நாம் பயன்படுத்தும் செயற்கை முறையில் தயாரிக்கும் ஷாம்பூக்கு பதிலாக, நாமே வீட்டில் இயற்கையான முறையில் மூலிகை சீயக்காய் தூள் தயாரித்து, அதனை விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
தேவையான பொருட்கள் :
◆ சீயக்காய் - 1 கிலோ
◆ செம்பருத்திப்பூ- 50
◆ பூலாங்கிழங்கு - 100 கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
◆ எலுமிச்சை தோல் - 25
◆ பாசிப்பருப்பு - கால் கிலோ
◆ மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
◆ கரிசலாங்கண்ணி இலை - 3 கப்
செய்முறை :
🌼 மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, பின்பு மெசினில் அரைத்து கொள்ள வேண்டும்.
🌼 மேலும் நமக்கு தேவையான அளவுகளில் கால் கிலோ, அரை கிலோ போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.
பயன்கள் :
மேற்குறிப்பிட்ட முறையில் தயார் செய்த சீயக்காய் தூளை உபயோகப்படுத்தும் போது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, மேலும் பொடுகை நீக்கி, முடி கருமையாக வளர உதவுகிறது.
விற்பனை செய்யும் முறைகள் :
இயற்கை முறையில் சீயக்காய் தயார் செய்வதால் விற்பனைக்கு பஞ்சமில்லை. இதனை அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் அல்லது சில்லரையாகவும் விற்பனை செய்யலாம்.