சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?
சுய தொழில்கள் ,
வெள்ளரிக்காய் சாகுபடி !
சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி ?
சுய தொழில்கள்,
வெள்ளரிக்காய் சாகுபடி !
அனைவரும் விரும்பி சாப்பிடும் காய் வகையில், வெள்ளரிக்காயும் ஒன்று. பயணத்தின்போது உடல் சூட்டைக் குறைக்கவும், தாகம் தீர்க்கவும் பலரும் விரும்பி உண்பது வெள்ளரியைத்தான். அதனால் வெள்ளரிக்கு எப்போதுமே நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. வெள்ளரிக்காய் ஒரு குறுகிய கால பயிர் ஆகும். இதன் வயது மூன்று மாதம் ஆகும். எனவே விவசாயிகள் வெள்ளரியை சாகுபடி செய்தால் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். இந்த வெள்ளரி சாகுபடியை எப்படி மேற்கொள்வது என பார்க்கலாம்.
ஏற்ற மண் மற்றும் பட்டம் :
👉 வெள்ளரி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்ப நிலை கொண்ட பருவம் சாகுபடிக்குச் சிறந்ததாகும். இதற்கு தை பட்டம் மிகவும் சிறந்தது.
👉 எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், அதிக மகசூல் பெற களிமண் மிகவும் சிறந்ததாகும் .
நிலத்தை தயார் செய்யும் முறை :
👉 ஓரு ஏக்கருக்கு 20 டன் எருவைக் கொட்டி களைத்து, நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்த பின்பு, ஒன்றறை மீட்டர் இடைவெளியில், நாற்பத்தி ஐந்து சென்டி மீட்டர் நீள அகல, ஆழத்தில் குழிகளை வெட்ட வேண்டும்.
விதையளவு மற்றும் விதைக்கும் முறை :
👉 வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு இரண்டு கிலோ விதை போதுமானது. பத்து கிலோ தொழு உரத்துடன் 100 கிராம் கலப்பு உரமிட்டு, மேல் மண் கலந்து விதையை ஊன்ற வேண்டும். ஒரு குழிக்கு நான்கு முதல் ஐந்து விதைகளை ஊன்ற வேண்டும்.
நீர் மேலாண்மை :
👉 விதை ஊன்றியவுடன் குடம் வைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பராமரிப்பு :
👉 விதைத்த ஐந்து நாட்களில் விதை முளைக்க தொடங்கிவிடும். செடி முளைத்து வந்தவுடன், குழிக்கு மூன்று செடி விட்டு, செடி களைப்பு செய்ய வேண்டும். கொடி வளர்ந்தவுடன் குழியை முப்பது நாட்கள் இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
Nice content
ReplyDelete